மருத்துவமனையில் இருந்தே பயனாளிகளுடன் முதல்-அமைச்சர் கலந்துரையாடல்
1 min read
Chief Minister interacts with beneficiaries from the hospital
23.7.2025
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வர் மு.க.ஸ்டாலின், வீடியோ கான்பிரன்சிங் வாயிலாக உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.
தமிழக முதல்வர் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் இருந்தே முதல்வர் ஸ்டாலின் அரசு பணியில் கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழக முதல்வர் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் இருந்தே முதல்வர் ஸ்டாலின் அரசு பணியில் கவனம் செலுத்தி வருகிறார்.
நேற்று, உங்களுடன் முதல்வர் திட்டம் தொடர்பாக, தலைமை செயலாளர் முருகானந்தம் உடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் இன்று (ஜூலை 23) தமிழக முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தபடியே, உங்களுடன் ஸ்டாலின் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து கோவை, கன்னியாகுமரி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங்
வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது முகாமிற்கு வந்த பொதுமக்களிடமும் உரையாடினார். அவர் பயனாளிகளிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து கலந்துரையாடினார். அப்போது முதல்வருடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதனை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
மருத்துவமனையில் இருந்தபடியே ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்ததோடு; அரசுக் கோப்புகளிலும் கையெழுத்திட்டேன்.
மருத்துவர்கள் அறிவுறுத்திய ஓய்வுக்குப் பிறகு, விரைவில் உங்களைச் சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன்!
‘இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.