அஞ்சலகங்களில் பொது வைப்பு நிதி கணக்கு சிறப்பு முகாம்
1 min read
Special camp for General Deposit Fund Accounts at post offices
24.7.2025
இந்திய அஞ்சல் துறை சார்பாக
அஞ்சலகங்களில் பொது வைப்பு நிதி கணக்கு தொடங்குவதற்கான சிறப்பு முகாம் வரும் 25.07.2025 முதல் 12.08.2025 வரை சிறப்பு முகாம்
அனைத்து அஞ்சலகங்களிலும்
நடைபெற உள்ளது.
இது பற்றி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் செ.சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய அஞ்சல் துறை சார்பாக குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம் போன்ற எதிர்காலத் தேவையை பூர்த்தி செய்ய பயன்படும் “தங்கமகன் சேமிப்புத் திட்டம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் அனைத்து அஞ்சலகங்களிலும் வரும் 25.07.2025 முதல் 12.08.2025 வரை சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது.
இந்த திட்டத்தின் மூலம் அனைவரும் இந்த கணக்கை ரூ.500/- செலுத்தி அனைத்து அஞ்சகங்களிலும் துவங்கலாம். இத்திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். ஒரு நிதியாண்டில் குறைந்த பட்ச தொகை ரூ. 500/-ம் அதிக பட்ச தொகையாக ரூ.1 இலட்சத்து 50 ஆயிரம் வரை இக்கணக்கில் செலுத்தலாம். அசலுடன் சேர்ந்து வட்டியும் அடுத்த வருட அசலாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். தற்போதைய வட்டி 7.1% சதவீதம் ஆகும். செலுத்தும் தொகை மற்றும் முதிர்வு தொகை என அனைத்திற்கும் பிரிவு 80C-ன் படி பெற்றோர்கள் வருமான வரிவிலக்கு பெறலாம். மேலும் லோன் மற்றும் செலுத்திய முதலீட்டில் குறிப்பிட்ட தொகையை முன்னரே பெறும் வசதியும் உள்ளது. கணக்கு தொடங்க குழந்தைகளின் பிறப்புச்சான்றிதழ், தாய் (அ) தந்தையின் பாஸ்போர்ட் நகல், போட்டோ, ஆதார் மற்றும் பான் கார்டு ஆகியவற்றுடன் அருகிலுள்ள அஞ்சலகத்தை அணுகலாம். மேலும் விவங்களுக்கு 04632-221013 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் பங்கு கொண்டு இத்திட்டத்தில் தங்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்கும் கணக்கு தொடங்கி பயனடையுமாறு கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செ.சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.