குற்றாலத்தில் சாரல் திருவிழா நிறைவு விழா
1 min read
Closing ceremony of the Saral festival in Courtallam
28.7.2025
தென்காசி மாவட்டம் குற்றாத்தில் சாரல் திருவிழாவின் நிறைவு நாள் சாரல் திருவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேருராட்சி கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சாரல் திருவிழாவின் நிறைவு நாள் திருவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
குற்றாலத்தில் ஆண்டு தோறும் தென்மேற்கு பருவ காலம் ஜீன் திங்களில் தொடங்கி செப்டம்பர் திங்களில் முடிவடைகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் நோக்குடன் சாரல் திருவிழா வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வருடம் சாரல் திருவிழா 20.07.2025 முதல் 27.07.2025 வரை சிறப்பாக நடைபெற்றது.
நிறைவு நாள் சாரல் திருவிழாவில் வரவேற்பு கலை நிகழ்ச்சிகளாக கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் தப்பாட்டம் சிலம்பாட்டம் நையாண்டி மேளம் மற்றும் கரகாட்டம் நிகழ்ச்சியும், கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் (விஸ்வநாத ராவ் பூங்காவில்) நாய்கள் கண்காட்சியும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாகர்கோவில் திருமதி என்.சிந்து குழுவினரின் நாட்டிய நாடகம் நிகழ்ச்சியும், கலை பண்பாட்டுத்துறை மற்றும் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் திருவில்லிபுத்தூர் மூங்கில் கலைக்குழுவினரின் கிராமிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலை பண்பாட்டுத்துறையில் பயிற்சி பெற்ற கடையநல்லூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்களின் கிராமிய கலை நிகழ்ச்சிகளும், தூத்துக்குடியில் கயல் குழுவினரின் மாடாட்டம் மற்றும் மயிலாட்டம் நிகழ்ச்சியும், மகாராஷ்டிரா மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும், சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் செல்வி.மிகிதா கலந்துகொள்ளும் தென்னக புகழ் தென்காசி. திரு.மாரியப்பன் அவர்களின் சப்த ஸ்வரங்கள் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
சாரல் திருவிழாவில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமார் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நினைவுப் பரிசுகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இரா.தண்டபாணி, கலை பண்பாட்டுத்துறை துணை இயக்குநர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட சிறுபான்மையினர் நல பிற்படுத்தப்பட்டோர் மற்றும் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செல்வக்குமார், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத்திட்டம்) நம்பிராயர், குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் சுஷாமா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.எடிசன். உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.