June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அருகே இலத்தூர் பகுதியில் உலா வந்த சிறுத்தை

1 min read

Leopard roaming in Lathur area near Tenkasi

28.7.2025
தென்காசி அருகே இலத்தூரில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் சிறுத்தை உலா வந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந் துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்குதொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மிளா, மான், கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வன உயிரினங்கள் உள்ளன.

அவை அவ்வப்போது உணவு, மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதிகளை விட்டு வெளியேறி ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் ஆடு மாடுகள், மற்றும் நாய்களை வனவிலங்குகள் வேட்டையாடிச் செல்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.குறிப்பாக வடகரை, மேக்கரை பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு மாடுகளை சிறுத்தைகள் குறி வைத்து வேட்டையாடும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு இலத்தூர் பகுதியில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்துள்ளது. எனவே, அந்த பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்கள்வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சி களை ஆய்வு செய்தனர். அப் போது அந்த வழியாக சிறுத்தை நடமாடும் காட்சி பதிவாகியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இரவில் இலத்தூர் பகுதிக்கு வந்த சிறுத்தை இலத்தூர் விலக்கு, குத்துக்கல்வலசை உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் வழியாக இரை தேடி அங்குமிங்கும் சுற்றி வந்தது தெரியவந்தது. இதுகு றித்து தகவலறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்

அவர்கள் அந்த பகுதிகளில் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் இரவு நேரத்தில் சிறுத்தை நடமாடுவதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் நடமாட வேண்டாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஊர் பகுதிக்குள் நடமாடி பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *