June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி- காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம்

1 min read

Woman electrocuted to death near Tenkasi – husband seriously injured while trying to save her

28.7.2025
தென்காசி அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற கணவர் மீதும் மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி அருகே உள்ள நெடுவயல், சிவகாமிபுரம் காலணி பகுதியைச் சேர்ந்தவர் முருகையா( வயது 55) , அவரது மனைவி சுடலைமாடத்தி (வயது 52). இவர்கள் இருவரும் அருகில் உள்ள வெள்ளத்துரை என்பவருடைய வயல்வெளி யில் விவசாயக் கூலி வேலை பார்த்து வந்தனர்.

இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். முருகையா மற்றும் அவரது மனைவி சுடலைமாடத்தி இருவரும் நேற்று முன்தினம் மாலையில் வழக்கம் போல் விவசாய வேலைகளை முடித் துவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்தப் பகுதியில் இருந்த மின்கம்பத்தை தாங்கிப் பிடிக்கும் ஸ்டே கம்பி மீது மின்கசிவு ஏற்பட்டு இருந்தது. அதை கவனிக்காத சுடலைமாடத்தியின் கை அந்த ஸ்டே கம்பியில் உரசியதால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது இதனால் சுடலைமாடத்தி கீழே சாய்ந்தார் இதை பார்த்து அவரது கணவர் முருகையா அருகில் கிடந்த தென்னை மட்டையை எடுத்து அடித்துள்ளார்.

ஆனால் அந்த மட்டை ஈரமாக இருந்ததால் முருகையா மீதும் மின்சாரம் பாய்ந்து உள்ளது. அந்த நேரத்தில் சுடலைமாடத்தி மின்சாரம் தாக்கியதில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது பற்றி தகவல் அறிந்த இலத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், மற்றும் போலீஸ் சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு படுகாயம் அடைந்த முருகையாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் இறந்து கிடந்த சுடலைமாடத்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *