தென்காசியில் சாலை பணியாளர் சங்கம் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
1 min read
Road Workers’ Union holds torchlight protest in Tenkasi
31.7.2025
தென்காசியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீப்பந்தம் கையில் ஏந்தி மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.
தென்காசி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு தென்காசி கோட்ட தலைவர் ஆர்.பாபுராஜ் தலைமை தாங்கினார். கோட்ட துணைத் தலைவர் எஸ்.அண்ணாமலை, இணைச் செயலாளர் எஸ். கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் யூ.முருகையா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி வட்ட செயலாளர் மு.சிதம்பரம் அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில பொதுச் செயலாளர் க.மார்த்தாண்ட பூபதி, துவக்க உரையாற்றினார்.
கோட்டச் செயலாளர் எஸ்.வேல் ராஜன் விளக்க உரையாற்றினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.ராஜசேகர், வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.முருகன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட செயலாளர் எம்.மனோகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சமூக நல பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜி. துரைசிங் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினார் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் நிறைவுரை ஆற்றினார்.
இந்த தர்ணா போராட்டத்தில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி பனிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் அதனை தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது.
சாலை பணியாளர்களில் உயிர் நீத்தவர்களின் குடும்பத்தில் கருணை அடிப்படையில் நியமனம் வழங்க கேட்டு விண்ணப்பம் செய்தவர்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும் மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்திட வேண்டும் தனியார் மயப்படுத்தலை கைவிட வேண்டும் மாநில நெடுஞ்சாலைகளை தமிழக அரசே பராமரித்திட வேண்டும் கிராம புற இளைஞர்களுக்கு பணி வழங்க வேண்டும் சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்பக் கல்வித் திறன் பெறாத ஊழியருக்கு உரிய ஊதிய மாற்றம் 520020200 தர ஊதியம் ரூபாய் 1900 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். முடிவில் கோட்ட பொறியாளர் கே .காசிராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.