இந்திய அஞ்சல் துறை சார்பில் பொதுகாப்பீட்டு சிறப்பு முகாம்
1 min read
General Insurance Special Camp organized by India Post
1.8.2025
இந்திய அஞ்சல் துறை சார்பில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின்”ஹர் கர் சுரக்சா” வீட்டுக்கு வீடு பொது காப்பீட்டு சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
இது பற்றி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செ.சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய அஞ்சல் துறை சார்பில் ஜூன் 01-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை “ஹர் கர் சுரக்சா” வீட்டுக்கு வீடு பொது காப்பீட்டு சிறப்பு முகாம் கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்திற்குட்பட்ட அஞ்சலகங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த காப்பீட்டுத் திட்டமானது விபத்துக்களால் ஏற்படும் செலவுகள், ஊனம், உயிரிழப்பு போன்றவற்றிற்கு பயனளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் 18 வயது முதல் 65 வயதிற்குட்பட்டவர்கள் சேரலாம். இந்த காப்பீட்டுத் திட்டத்தில் வருடத்திற்கு ரூ.559 செலுத்தினால் ரூ.10 லட்சமும், ரூ.799 செலுத்தினால் 15 லட்சமும் கிடைக்கும். மேலும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு மருத்துவக்காப்பீடு, இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் காப்பீடும் வழங்குகிறது.
இத்திட்டங்களில் சேர கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தங்கள் பகுதி தபால்காரர் மூலமும் இத்திட்டத்தில் சேரலாம். பொதுமக்கள் தங்களையும், மேலும் தங்கள் வாகனங்களையும் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்து பயனடையலாம்.
இவ்வாறு கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப் பாளர் செ.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.