August 20, 2026

Seithi Saral

Tamil News Channel

துணை ஜனாதிபதி தேர்தல் தேதி அறிவிப்பு

1 min read

Vice Presidential Election Date Announced

1.8.2025
துணை ஜனாதிபதி பதவியை ஜூலை 21-ந்தேதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த நிலையில், துணை ஜனாதிபதி தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ந்தேதியன்று நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

துணை ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிடுவோர் ஆக. 7-ந்தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

துணை ஜனாதிபதி தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்று துணை ஜனாதிபதியை தேர்வு செய்வர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *