தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்- தென்காசியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
1 min read
AIADMK government will be formed again in Tamil Nadu – Edappadi Palaniswami’s speech in Tenkasi
6.8.2025
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவ தும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் இந்நிலையில் நேற்று தென்காசி தெற்கு மாவட்டம் தென்காசியில் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். அப்போது தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று அவர் பேசினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி நேற்று முன்தினம் நெல்லை மாவட்டத்தில் பிரச்சாரத்தை முடித்து விட்டு இரவு குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள இசக்கி ரிசார்ட்ஸிற்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ். செல்வ மோகன்தாஸ் பாண்டியன் மற்றும் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் செ.கிருஷ்ண முரளி (எ) குட்டியப்பா எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று மாலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இருந்து தனது பிரச்சார வாகனத்தில் தென்காசி நோக்கி வந்தார் அப்போது குற்றாலம், குடியிருப்பு, மேலகரம், யானை ப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கொடிகளும், வரவேற்பு வளைவுகளும், டிஜிட்டல் பேனர்களும், அமைத்து அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத்தொடர்ந்துதென்காசி மேலமாசிவீதி எம்ஜிஆா் திடலில் பிரச்சார வாகனத்தில் நின்றபடி எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தென்காசி நகரமே மக்கள வெள்ளமாக காட்சியளிக்கிறது விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். அதுபோல் இங்கு காணக்கூடிய மக்கள் கூட்டம், உங்களின் ஆரவாரம், மகிழ்ச்சி அதிமுகவின் வெற்றிக்கு மிகப்பெரிய அறிகுறியாக தெரிகிறது.
இந்தப் பகுதியை பொறுத்தவரை வேளாண்மை நிறைந்த பகுதி. விவசாயத்தை நம்பிதான் இப்பகுதி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் வேளாண்மைக்கு முன்னுரிமை கொடுத்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியது.
இயற்கை சீற்றங்கள், பேரிடா்கள், கனமழை போன்றவற்றால் விளைபயிா்கள் சேதமடைந்தபோது பயிர்க்காப்பீடு இழப்பீடு தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. வறட்சி நிவாரணம், கொள்முதல் நெல்லுக்கு உடனடி பணப்பட்டுவாடா என விவசாயிகள் நலனை பேணியது அதிமுக அரசு தான்.விவசாயிகளுக்காக திமுக அரசு ஏதாவது நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளதா? ஏற்கெனவே இருந்த திட்டங்களை நிறுத்தியதுதான் அதன் சாதனை.
இந்த ஆட்சிக்கு நான் வழங்கும் மதிப்பெண் 10-க்கு ஜீரோதான்.
இந்த ஆட்சியில் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பு இல்லை. மாநிலம் முழுவதும் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதை தடுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் பேசியும், அறிக்கை வெளியிட்டும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றேன். ஆனால், திமுக அரசு அதை கண்டு கொள்ளவில்லை. கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் தொல்லை நிகழாத நாளே இல்லை என்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீா்கெட்டுள்ளது.
அதிமுகவின் ஆட்சிதான் தமிழகத்தின் பொற்கால ஆட்சியாகும். இந்தியாவிலேயே மருத்துவ படிப்புக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது அதிமுக அரசு.
திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட லேப்டாப் திட்டம் 2026இல் அதிமுக ஆட்சி அமையும்போது மீண்டும் கொண்டுவரப்படும். 4,000 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்படும். உங்களுடன் ஸ்டாலின் திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் எல்லாம் மக்களை ஏமாற்றுகிற வேலை. இது, சட்டசபை தோ்தலுக்காக திமுக நடத்தும் நாடகம். தமிழக மக்கள் திமுக கூட்டணியை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை; அதிமுக – பா.ஜ.க. கூட்டணிக்குத்தான் ஏகபோக வரவேற்பு உள்ளது.
இந்த தொகுதியில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி உள்ளதா? சங்கரன்கோவிலில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என சொன்னார்களே அமைத்தார்களா? கடையநல்லூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்படும் என்றார்கள் அமைந்தார்களா? தென்காசியில் அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும் என்றார்கள் அமைத்தார்களா? புளியங்குடியில் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான குளிர்பதன வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார்கள் செய்தார்களா? கொப்பரை தேங்காவிற்கு மின்சார உலர் வசதி ஏற்படுத்தப்படும் என்று சொன்னார்கள் செய்தார்களா? தென்காசியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படும் எனச் சொன்னார்கள் அமைந்தார்களா?
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு தொடர வேண்டுமா?”
அதிமுக ஆட்சியில் தென்காசி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் கோரிக்கையை ஏற்று
தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கினோம். புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் கட்ட 119 கோடியில் பணிகள் தொடங்கப்பட்டு, பணிகள் முடிந்தும் அதனை திறக்க முடியாமல் திமுக அரசுஉள்ளது.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஆட்சியர் அலுவலக கட்டிடம் திறக்கப்படும். தென்காசி – நெல்லை நான்குவழிச் சாலை திட்டத்தை கொண்டுவந்தது அதிமுக அரசு ,தென்காசியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், நீதிபதிகள் குடியிருப்பு, அரசு பள்ளிகளில் கட்டிட வசதி, தென்காசி மாவட்டத்தில் புதிய பாலங்கள் கட்டினோம். இரட்டை குளம் கால்வாய் திட்டம் மற்றும் ஜம்பு நதி கால்வாய் திட்டத்தை கொண்டு வந்தோம். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இந்த கால்வாய் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்.
தென்காசியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுற்றுச் சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப் படும். குற்றாலம் சுற்றுலா தலத்தை மேம்படுத்த வசதிகள் செய்யப்படும்” எனவே 2026 சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் அனைவரும் அதிமுகவை ஆதரித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், காமராஜ், விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, கடம்பூர் ராஜு, மதுரை டாக்டர் சரவணன், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்செ.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா, தென்காசி தெற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் கௌரிசங்கர், தென்காசி வடக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் டாக்டர் முத்தையா,தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி, அதிமுக மாவட்ட அவை தலைவர்கள் இலஞ்சி எஸ்.கே. சண்முக சுந்தரம், வி.பி.மூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் பொய்கை சோ. மாரியப்பன், மாவட்ட பொருளாளர் சண்முகையா, சாமிநாத பாண்டியன், குற்றாலம் பேரூராட்சி மன்ற தலைவர் எம்.கணேஷ் தாமோதரன், அச்சன்புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் டாக்டர் சுசீகரன், தென்காசி நகர அதிமுக செயலாளர் வே. சுடலை, தென்காசி ஒன்றிய அதிமுக செயலாளர் எஸ்.சங்கர பாண்டியன்,
எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அதிமுக சார்பு அணிகளின் நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் கார்த்திக்குமார், சின்னத்துரை, நெல்லை முகிலன், டாக்டர் கிருஷ்ணசாமி, இலஞ்சி
மு.காத்தவராயன், சிவசித்தாராம், மற்றும் அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.