இந்தியா வல்லரசாக வேண்டி தோரணமலை கிரிவலத்தில் பிரார்த்தனை
1 min read
Prayers at Thoranamalai Girivalam for India to become a superpower
9.8.2025
தென்காசி மாவட்டம், தென்காசி – கடையம் செல்லும் சாலையில் உள்ள தோரணமலை முருகன் கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி கிரிவலம் நடைபெறுகிறது. மேலும் கிரிவலம் முடிந்ததும் பக்தர்களின் கூட்டு பிரார்த்தனையும் நடக்கும்.
அதன்படி ஆனி மாத பவுர்ணமி கிரிவலம் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. அதிகாலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
அவர்கள் கோவிலை அடைந்ததும் கூட்டுப்பிரார்த்தனை நடந்தது.
இதில் கீழ்கண்ட வேண்டுதல்கள் முன்வைக்கப்பட்டன.
தேவைகள் அனைத்தும் உள்நாட்டில் உற்பத்தியாகி தன்னிறைவு அடைய வேண்டும் தோரண மலை முருகா
இந்தியா பொருளாதார வளம் கண்டு வல்லரசாக வேண்டும் தோரண மலை முருகா
பீடி சுற்றும் தொழில் செய்யும் ஏழை பெண்கள் முன்னேற வேண்டும் தோரண மலை முருகா
பிள்ளை வரம் வேண்டிவரும் பெற்றோருக்கு நல்லருள் வழங்குவாய் தோரண மலை முருகா
கிராமத்து பிள்ளைகள் சிறந்த கல்வி வளம் காண வைப்பாய் தோரண மலை முருகா
வேளாண்மை செழித்து அதிக மகசூல் கிடைக்க வேண்டும் தோரணமலை முருகா
மேற்கண்ட கோரிக்கைகளை வேண்டி பிரார்த்தனை நடந்தது.
பக்தர்கள் அனைவருக்கும் காலை மற்றும் மதியம் அன்னதானம், பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.