June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

பெத்தநாடார்பட்டியில்மின்சாரம் தாக்கி திமுக செயலாளர் பலி-நிதி உதவி 

1 min read

DMK secretary dies in power outage in Bethanatarpatti – financial assistance

10.8.2025

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் பெத்தநாடார்பட்டியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த திமுக கிளை செயலாளர் குடும்பத்துக்கு  திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.

கீழப்பாவூர் வடக்கு ஒன்றியம், பெத்தநாடார்பட்டி ஊராட்சி, பொட்டலூரை சேர்ந்த திமுக கிளைச்செயலாளர் ஜெயக்குமார் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

 பூலாங்குளத்தில் நடைபெற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தின விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அக்குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவரது குடும்பத்திற்கு ரூபாய்.20 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.மேலும் திமுக தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்று உதவிகள் செய்வதாக உறுதியளித்தார். 

இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன்,  திமுக ஒன்றிய பொறுப்பாளர்கள் பொன்செல்வன், ஜெ.கே.ரமேஷ், பெத்தநாடார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி கலைச்செல்வன், துணைத்தலைவர் ஜெயராணி அந்தோணிராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

One attachment  •  Scanned by Gmail

Add all to Drive

ReplyReply allForwardAdd reaction

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *