பா.ஜ.க. பிரமுகர் அலிஷா அப்துல்லா குறித்து ஆபாச பேச்சு; யூடியூபர் முக்தார் கைது
1 min read
YouTuber Mukthar arrested for making obscene remarks about BJP functionary Alisha Abdullah.
10.6.2026
ஆபாசமாக பேசியதாக அலிஷா அப்துல்லா அளித்த புகாரில் கர்நாடகாவில் தலைமறைவாக இருந்த யூடியூபர் முக்தார் அகமது கைது செய்யப்பட்டார்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த, பா.ஜ., பிரமுகர் அலிஷா அப்துல்லா என்பவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பெண்ணின் கண்ணியம் மற்றும் தனியுரிமை குறித்து அவதுாறாக பேசியதுடன், வெளியில் சொல்ல முடியாத வகையில் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளனர் என அலிஷா அப்துல்லா குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த வழக்கில், திமுக எம்பி., திருச்சி சிவா மகன் சூர்யா சிவாவை முதலில் கைது செய்த போலீசார், தற்போது கர்நாடகாவில் தலைமறைவாக இருந்த யூடியூபர் முக்தார் அகமதுவை கைது செய்துள்ளனர்.
முக்தார் அகமது திமுக ஆதரவாளர். திமுகவுக்கு எதிராக பேசியவர்களை தாறுமாறாகவும், அவதுாறாகவும் விமர்சனம் செய்து வந்தார். தங்களுக்கு வேண்டியவர் என்பதால் அவர் மீது திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது. முந்தைய திமுக ஆட்சியில், கவலை இல்லாமல் சுற்றித்திரிந்த அவதுாறு பேச்சாளர் முக்தார், இப்போது ஆட்சி மாறிய நிலையில் சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளார்.