June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 3,200 ரூபாய் குறைவு

1 min read

Gold price drops by Rs 3,200 per sovereign in a single day.

10/6/2026
சென்னையில் இன்று (ஜூன் 10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 3200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், கிராமுக்கு 400 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால் தங்கம், வெள்ளி விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 08) ஆபரண தங்கம் கிராம், 14,070 ரூபாய்க்கும், சவரன், 1,12,560 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 270 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று (ஜூன் 09), தங்கம் விலை கிராமுக்கு, 130 ரூபாய் உயர்ந்து, 14,200 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,040 ரூபாய் அதிகரித்து, 1,13,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில் இன்று (ஜூன் 10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 3200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், கிராமுக்கு 400 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 260 ரூபாய்க்கும், கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *