June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி: கரும்புச்சாறு எந்திரத்தில் பெண்ணின் கை சிக்கியதால் பரபரப்பு

1 min read

Tenkasi: Woman’s hand gets caught in sugarcane juice machine, causing a stir

13/8/2025
தென்காசியில் கரும்புச் சாறு எந்திரத்தில் பெண்ணின் கை சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளாவை சேர்ந்தவர் ஜிஜூ. இவரது மனைவி மினி. இவர்கள் தென்காசி புதிய பஸ் நிலையம் ஹவுசிங் போர்டு பகுதியில் மெயின் ரோட்டில் கரும்புச்சாறு எந்திரம் வைத்து தொழில் செய்து வருகின்றனர்.
இவர்கள் நேற்று காலை சுமார் 11 மணி அளவில் வழக்கம் போல் கரும்புச்சாறு விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். அந்த வழியாக வந்த சிலர் கரும்புச்சாறு கேட்டதால் அவர்களுக்கு சாறு அரைப்ப தற்காக எந்திரத்தை கழுவும் பணியில் மினி ஈடுபட்டார்.
அப்போது அவரது இடது கை எந்திரத்தின் உள்ளே சிக்கிக்கொண்டது. வெளியே எடுத்துப்பார்த்தும் வரவில்லை. இதனால் அவர் வலியால் துடித்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தென்காசி தீயணைப்புதுறை யினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் வந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலை யில் எந்திரத்தை கழட்ட முடி யாத நிலை ஏற்பட்டது. அதை யடுத்து அதேபகுதியில் வெல் டிங் பட்டறை நடத்தி வரும் நபர் வெல்டிங் மிஷினால்
கரும்புச்சாறு எந்திரத்தை தீய ணைப்பு துறையினரின் ஆலோசனைக்கு இணங்க சிறிது சிறிதாக வெட்டி எடுத் தார். அதன் பின்னரே எந்தி ரத்தில் சிக்கிய மினியின் கை பத்திரமாக மீட்கப்பட்டது.

அதன்பின்அவர் தென்காசி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், சிறிது நேரம் போக்குவ ரத்தும் பாதிக்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *