June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

உதயநிதி ஸ்டாலின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த மாதம் 1-ந் தேதி விசாரணை

1 min read

Supreme Court to hear Udhayanidhi Stalin’s petition on 1st of next month

14.8.2025
சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந் தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில், சனாதனத்தை டெங்கு மலேரியாவை போல ஒழிக்க வேண்டுமென துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார்.

இதனையடுத்து அவர் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குப்பதியப்பட்டது.இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரியும், வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க உத்தரவிடக்கோரியும் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது.

இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக்கோரி அவர் சார்பில் வக்கீல் கார்த்திகேய சிங், நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன் நேற்றுமுன்தினம் முறையிட்டார். இந்த முறையீட்டை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *