ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத் குமார் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம்கோர்ட்டு
1 min read
Supreme Court dismisses IPS officer Pramod Kumar’s petition
22.8.2025
தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் பதவிக்காலம் இம்மாதம் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு டிஜிபி பதவிக்கு தனது பெயரை பரிசீலிக்க உத்தரவிடக்கோரி ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத் குமார் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத் குமார் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு பிரமோத்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. செப்டம்பரில் ஓய்வுபெறும் நிலையில் மனுதாக்கல் செய்துள்ளதால் இதனை ஏற்க முடியாது என தலைமை நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
மேலும் ஓய்வுபெறும் 6 மாதத்துக்குள் யாரையும் டி.ஜி.பி.யாக நியமனம் செய்யக்கூடாது என்று சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.