கீழப்புலியூர் பெரிய குளத்தில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை பயிற்சி
1 min read
Firefighters conduct drills at Keelappuliyur Big Pond
7.9.2025
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து தென்காசி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் கீழப்புலியூர் பெரியகுளத்தில் நடத்திய சிறப்பு ஒத்திகை பயிற்சியை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் , தென்காசி மாவட்ட தீயணைப்பு அலுவலர் மொ.மணிகண்டன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தென்காசி அருகே கீழப்புலியூர் பெரியகுளத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்வது குறித்து சிறப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது. இதில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் , மாவட்ட தீயணைப்பு அலுவலர் மணிகண்டன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஒத்திகை பயிற்சியில்
தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை உதவி மாவட்ட அலுவ லர்கள் சுரேஷ் ஆனந்த், பிரதீப்குமார் மற்றும் நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். சிறந்த பயிற்சி பெற்ற தீய ணைப்பு வீரர்கள் பேரி டர் காலங்களில் எப்படி செயல்படுவது என்பது குறித்து செயல்முறை விளக் கம் காண்பிக்கப்பட்டது.
பயிற்சியில் ஆற்றில் சிக்கியவர்களையும், தண்ணீரில் மிதக்கும் பொருட்க ளையும் எவ்வாறு மீட்பது என்பது குறித்து செய்து காண்பித்தனர் ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் அந்த கரையிலிருந்து இந்த கரைக்கு படகில் சென்று மீட்பது, திடீர் வெள்ளப் பெருக்கால் ஆற்றில் தத்த ளித்துக் கொண்டிருப் பவர்களை மீட்டு 108 ஆம் புலன்ஸ் மூலம் சிகிச்சை அளிப்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
இந்த பயிற்சியில் தென்காசி அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி,
ஆய்க்குடி ஜே.பி. கல்லூரி,
மாணவ மாணவிகள் மற்றும்
கீழப்புலியூர் இந்து மேல்நிலைப்பள்ளி என் சிசி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.