தென்காசி காசிவிசுவநாதர் கோவிலில் ரூ.2 லட்சம் பொருட்கள்திருட்டு- தலைமை அர்ச்சகர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
1 min read
Theft of goods worth Rs. 2 lakhs at Tenkasi Kasi Viswanathar Temple – Case registered against 5 people including the chief priest
14/9/2025
தென்காசி காசிவிசுவநாதர் சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.2 லட் சம் பொருட்களை
திருடிய தலைமை அர்ச்சகர் செந்தில் உள்பட 5பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்காசியில் பிரசித்தி பெற்ற காசிவிசுவநாதர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் 7 ம் தேதி நடைபெற்றது. அப்போது, பக்தர்கள் பலர் கோவிலுக்கு வெள்ளிக்குடங்கள், வெள்ளி விளக்குகள்,வாளிகள், தாம் பூலங்கள், பட்டு வஸ்திரங் களை காணிக்கையாக வழங் கினார்கள்.
இவ்வாறு பெறப்பட்ட காணிக்கைகள் அனைத்தும் அம்மன் சன்னதி மடப்பள்ளி யில் வைக்கப்பட்டு இருந்தது. அதில் சில பொருட்கள் திருட்டு போனதாக கூறப்படுகிறது.
இது குறித்து தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் செயல் அலுவலர் பொன்னி, தென்காசி போலீசில் புகார் அளித்தார். அந்த புகார் மனு வில் அவர் கூறி இருப்பதாவது:-
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பித்தளை குடம், வெள்ளி வாளி, வெள்ளி விளக்குகள், கரண்டி, பிர சாதபை உள்ளிட்ட பொருட்கள் அம்மன் சன்னதி மடப்பள்ளியில் இருந்தது.
இந்நிலையில் கடந்த 21-ந் தேதி மடப்பள்ளியில் சோதனை செய்த போது அந்த பொருட்கள் |அங்கு இல்லை, கோவிலில் உள்ள கண்காணிப்பு கேம ராக்களை ஆய்வு செய்த போது அங்கிருந்த பொருட்களை காசிவிஸ்வநாதர் கோவிலில் தற்காலிக அர்ச்சகராக பணிபுரியும் அருப்புக்கோட்டையை சேர்ந்த நடன சபாபதி, பக்தர்கள் ஹரி, தினேஷ் மற்றும் கணேசன் ஆகியோர் பெரிய அட்டை பெட்டிகள் மற்றும் சாக்குகளில் வைத்து கோவிலின் தெற்குவாசல் வழியாக
ஒரு ஆட்டோவில் எடுத்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து நடனசபாபதி. ஹரி ஆகியோரிடம் விசாரித்த போது கோவிலில் முதன்மை அர்ச்சகராக உள்ள செந்தில் ஆறுமுகம் சொன்னதால், பொருட்களை எடுத்து அவரது வீட்டிற்கு கொண்டு சென்றோம் என்று தெரிவித்தனர்.
கோவிலில் உள்ள 15 பித்தளை குடங்கள், 20 வெள்ளி வாளிகள், 20 கரண்டிகள், 2 சால்வை பாக்ஸ், 2 பிரசாத பை பாக்ஸ் ஆகியவை திரு டப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.1.95 லட்சம் இருக்கும். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டு உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி காவல் நிலைய
சப்-இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி. 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்ற நபர்களை போலீசார் விரைவில் கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.