June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம் திருவள்ளுவர் கழகத்தின் மகளிர் கருத்தரங்கம்

1 min read

Women’s Seminar of the Kadayam Thiruvalluvar Kazhagam

14.9.2025
கடையம் திருவள்ளுவர் கழகத்தின் மாதாந்திர கூட்டம் நேற்று (13.9.2025) மகளிர் கருத்தரங்கமாக நடந்தது. வடக்கு ரதவீதியில் உள்ள கே.எஸ்.எஸ். சிற்றரங்கத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு டாக்டர் கல்யாணி பரமசிவன் தலைமை தாங்கி “இல்லற சவால்களும், சாதனைகளும்” என்ற தலைப்பில் பேசினார். தமிழாசிரியர் ராமலட்சுமி “கணிணி யுகத்தில் இல்லறம்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். “புதுமை படைக்கும் பெண்” என்ற தலைப்பில் சங்கரகோமதி என்ற பிரியா பேசினார்.
திருவள்ளுவர் கழக தலைவர் ஆ.சேதுராமலிங்கம் மற்றும் கிருஷ்ண பொன்ஜோதி வாழ்த்துரை வழங்கினார்கள்.
சிவசங்கரி “குறள் சிந்தனை” பற்றி பேசினார். நேகாஸ்ரீ, ஸ்ரீபூஜை, ஹர்ணி, பிரதீபா ஆகியோர் கடவுள் வாழ்த்து பாடினார்.
முன்னதாக திருவள்ளுவர் கழக செயலாளர் கே.எஸ். கல்யாணி சிவகாமிநாதன் வரவேற்றார். செல்வ இலக்கியா நன்றி கூறினார்.

விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *