பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி, பினராயி விஜயன் பிறந்தநாள் வாழ்த்து
1 min read
Rahul Gandhi, Pinarayi Vijayan wish PM Modi on his birthday
17.9.2025
பிரதமர் மோடி தனது 75-வது பிறந்தநாளை இன்று (புதன்கிழமை) கொண்டாடினார். பா.ஜனதாவை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளும் சக்தியாக புதிய உச்சத்துக்கு கொண்டு சென்ற தலைவரான மோடியின் பிறந்தநாளை நாடு முழுவதும் சிறப்பாக பா.ஜனதாவினர் கொண்டாடினர்.முடிவு செய்துள்ளனர்.
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். அந்த வகையில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி கிடைத்திட வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.