தென்காசியில் சிவந்தி ஆதித்தனாரின் 90 வது பிறந்தநாள் விழா
1 min read
Sivanthi Adithanar’s 90th birthday celebration in Tenkasi
24/9/2025
தென்காசியில் பத்மஸ்ரீ டாக்டர் பா சிவந்தி ஆதித்தனாரின் 90 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் சிறப்பு பூஜையும் அதனைத் தொடர்ந்து வருகை தந்த பக்தர்களுக்கு லட்டு வழங்கியும் அன்னதானம் வழங்கியும் சிறப்பு செய்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நாடார் உறவினர்கள் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார் தென்காசியில் பத்மஸ்ரீ டாக்டர் பா சிவந்தி ஆதித்தனாரின் பெயரை என்னாளும் நினைவு கொள்கின்ற வகையில் தென்காசி புதிய பேருந்து நிலையத்திற்கு பத்மஸ்ரீ டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார் அவர்களுடைய பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் கொட்டாகுளம் கணேசன், தென்காசி மாவட்ட தலைவர் ராஜ் நயினார் குருசாமி நாடார் பாலசுப்பிரமணியன் முருகன் மணிகண்டன் சுசீந்திரன் கன்னன் ராஜ் மாரிச்செல்வம் கிருஷ்ணமூர்த்தி மகாபிரபு பாலசுப்ரமணியன் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.