கிட்னி திருடர்கள் தண்டிக்கப்படுவார்கள்- விஜய் ஆவேச பேச்சு
1 min read
Kidney thieves will be punished – Vijay’s passionate speech
27.9.2025
நாமக்கல்லில் பரப்புரை மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியதாவது:-
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என்னுடைய வணக்கம் என்று தவெக தலைவர் விஜய் தனது உரையை தொடங்கினார்.
ஏன் எந்த விஜய் எந்த இடத்திற்கு சென்றாலும் கேள்வியாக கேட்கிறார் இதற்கான விளக்கத்தை ஏற்கனவே இரண்டு இடத்தில் கூறியிருந்தோம். கல்வி ரேஷன் மருத்துவம் அடிப்படை சாலை வசதி மின்சாரம் போக்குவரத்து பெண்கள் பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு இது போன்ற அடிப்படை விஷயங்களில் எந்த சமரசம் இல்லாமல் சரியாக செய்யப்படும் என கூறியிருந்தோம் இதைத்தானே எல்லோரும் சொன்னார்கள் அதைத்தான் இவரும் சொல்றாரு இவர் புதிதாக ஏதும் சொல்லவில்லை.
ஐயா அரசியல் மேதைகளே பெரியவர்களே ஒரு மனிதனுக்கு சாப்பிடுவதற்கு நல்ல சாப்பாடு படிப்பதற்கு நல்ல கல்வி குடிப்பதற்கு நல்ல குடிநீர் மருத்துவ வசதி வேணுன்ற இடத்திற்கு போயிட்டு வர ஒரு சாலை வசதி பாதுகாப்பான வாழ்க்கை இதுதான் ஒரு அடிப்படை மனிதனுக்கு தேவை.
அப்புறம் அதை சரியாக செய்வோம் என்று சொல்வது தானே சரி. இது திமுக மாதிரி பொய்யான வாக்குறுதிகளை எப்பொழுதும் கொடுக்க மாட்டோம்.
புதுசா சொல்லுங்க புதுசா சொல்லுங்கண்ணா என்னத்த சொல்ல சொல்றீங்க எனக்கு புரியலையே.
புதுசா என்னப்பா சொல்றது செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி கட்டப்படும் ,காற்றில் கல் வீடு கட்டப்படும், அமெரிக்காவிற்கு ஒத்தையடி பாதை போடப்படும், வீட்டுக்குள் ஏரோபிளேன் ஓட்டப்படும், இது போன்ற அடித்து விடுவோமா நம்முடைய முதலமைச்சர் அடித்து விடுவாரே அது போன்ற அடித்து விடுவோமா.
ஒவ்வொரு ஒன்றியத்திலும் தானியக் கிடங்கு அமைக்கப்படும் என்ற வாக்குறுதி கொடுத்தார்களே செய்தார்களா ?
தானிய சேமிப்பு கிடங்குகள், கொள்முதல் நிலையங்கள் இணைக்கப்படும் என் சொன்னாளர்கள், செய்தார்களா ?
கொப்பரை தேங்காய்கள், வெல்லம், ரேஷன் கடை மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை என சொன்னார்கள் செய்தார்களா ?
நாட்டுச்சர்க்கரை ரேஷன் கடைகளில் விநியோகம், போக்குவரத்து ஊழியர்களுக்கும் பழைய பென்ஷன் திட்டம் செய்தார்களா?
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற கிட்னி திருட்டு., அதுதான் நாடறிந்த விஷயம் ஆயிற்றே. அதை ஏற்கனவே திருச்சியில் பேசியிருந்தேன். ஆனால் நாமக்கல்லை சேர்ந்தவர்கள்தான் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என சொல்கிறார்கள். அதிலும் குறிப்பாக விசைத்தறையில் பணிபுரியும் ஏழை பெண்களை குறி வைத்து இந்த கிட்னி திருட்டு நடந்திருக்கிறது என்று கூறுகிறார்கள்.
இந்த விஷயத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நம்மளுடைய ஆட்சி அமைந்ததும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.
இந்த கிட்னி திருட்டு எங்கிருந்து தொடங்கியது என்று பார்த்தால் கந்துவட்டி கொடுமையில் இருக்கிறது. அதாவது விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்க்கை தரத்தையும் பொருளாதாரத்தையும் எந்த ஏற்றமும் இல்லாமல் செய்துள்ள இந்த மாடல் அரசு, மேம்படுத்தாத காரணத்தினால் அவர்கள் கிட்னியை விற்கும் அளவிற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை.
விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை பொருளாதாரத்தை மேம்படுத்த தேவையான தேர்வுகளை யோசித்து உறுதியாக தேர்தல் அறிக்கையில் சொல்வோம்.
இவ்வாறு விஜய் பேசினார்.