June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை- ஐ.நா.வில் தீர்மானம் வெற்றி

1 min read

US sanctions on Iran – Resolution wins at UN

27.9.2025
மேற்காசிய நாடான ஈரான், அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதை தடுக்கும் நோக்கில், 2015-ல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒப்பந்தம் செய்தன. பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. இந்தத் தடையை நீக்குவது தொடர்பாக பல கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், இதில் முடிவு ஏதும் ஏற்படவில்லை.

இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள், ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகள் விதிப்பதற்கான ‘ஸ்னாப்பேக்’ திட்ட செயல்முறைகளை துவக்கின. இந்த செயல்முறையின் படி, பொருளாதார தடைகள் 30 நாட்களுக்குள் மீண்டும் அமலுக்கு வரும்.

இந்த நிலையில் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிப்பதா அல்லது நிரந்தரமாக தடைகளை நீக்குவதா என்பது குறித்த வரைவு தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 நாடுகளின் வாக்கெடுப்புக்காக முன் வைக்கப்பட்டது . ஓட்டெடுப்பில் ரஷியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் எதிராக வாக்களித்தன. இரண்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து, வரைவுத் தீர்மானம் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதை ஆறு மாதங்கள் தாமதப்படுத்த கோரி ரஷியா மற்றும் சீனா கொண்டு வந்த வரைவு தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது. இதன்படி ரஷியா, சீனாவின் கடைசி முயற்சியும் தோல்வியடைந்தது. இதையடுத்து ‘ஸ்னாப்பேக்’ திட்ட செயல்முறையின்படி ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் இன்று (செப்டம்பர் 28) மீண்டும் அமலுக்கு வர உள்ளது.

இதனால் ஈரானின் வெளிநாட்டு சொத்துகள் முடக்கப்படும்; ஈரானால் எந்த நாட்டுடனும் ஆயுத ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியாது. மேலும் ஈரான் பாலிஸ்டிக் ரக ஏவுகணை சோதனை நடத்தினால் அதற்காக தண்டனை விதிக்கப்படும். இது, ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள ஈரானை மேலும் பாதிக்கும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *