தென்காசியில்ரூ.6 கோடியில் மாவட்ட மருந்துக் கிடங்கு திறப்பு விழா
1 min read
District drug warehouse worth Rs. 6 crore inaugurated at Tenkasi Government Hospital premises
7.10.2025
தென்காசி அரசு தலைமை மருத்துவ மனை வளாகத்தில் ரூ.6 கோடி மதிப்பில் கட்டப் பட்ட மாவட்ட மருந்துக் கிடங்கை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்துவைத்த நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் குத்துவிளக்கேற்றினார்.இந்த நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் , தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக் குமார், தென்காசி நகர்மன்றத் தலைவர் ஆர்.சாதிர் உள்ளிட்ட முக்கியப்பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் தென்காசியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.6 கோடி மதிப் பில் தென்காசி மாவட்ட மருந்து கிடங்கு கட்டுமானப் பணிகள் துவங்கி வேகமாக நடந்துவந்தன. இப் பணிகள் நிறைவடைந்த நிலையில் மாவட்ட மருத்துவ கிடங்கின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இந்நிலையில் காணொளி காட்சி வாயிலாக சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்த மருத்துவக் கிடங்கை திறந்துவைத்தார்.
அதனைத் தொடர்ந்து தென்காசி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் தென்காசி எஸ்.பழனி நாடார், சங்கரன்கோவில் வழக்கறிஞர் ஈ.ராஜா, வாசுதேவநல்லூர் டாக்டர் சதன் திருமலைக் குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர், சுகாதார நலப் பணிகளுக்கான இணை இயக்குநர் பிரேமலதா. கோவிந்தன், திமுக நகர பொருளாளர் சேக்ப ரித் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் சந்தோஷ். பிரபாகரன், சண் முகவேல் உள்ளிட்ட முக் கியப் பிரமுகர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலத்து கொண்டனர்.