தென்காசியில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி
1 min read
Financial assistance to children who lost their parents in Tenkasi
7.10.2025
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் குழந்தை பாதுகாப்பு அலகின் சார்பில் மாவட்ட நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பெற்றோரால் கைவிடப்பட்ட, பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு கூட்டாண்மை சமூகப்பொறுப்பு நிதியிலிருந்து காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், வழங்கினார்.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் சார்பில் மாவட்ட நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் ஐந்தாம் கட்டமாக பெற்றோரால் கைவிடப்பட்ட, ஊனமுற்ற பெற்றோரின் குழந்தைகள் 6 பேர்களுக்கு தலா ரூ.10,000/- மதிப்பிலான காசோலைகளையும், பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகள் 148 பேர்களுக்கு தலா ரூ.5000/- மதிப்பிலான காசோலைகளையும் கூட்டாண்மை சமூகப்பொறுப்பு (CSR) நிதியிலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், வழங்கினார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு மைய எண்.1098 குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம், இளைஞர் நீதிச்சட்டம் 2015 போக்சோ சட்டம் 2012 தமிழ்புதல்வன் புதுமைப்பெண் ஆகியவைகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டு விழிப்புணர்வு குறித்த பதாகைகளும் வழங்கப்பட்டது.
அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களும் இதுபோன்று குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கிட முன்வர வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள்துறையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் மூலமும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட நிதி ஆதரவு திட்ட ஒப்புதல் குழுவின் உறுப்பினர், செயலாளர் மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் தி எல்.அலெக்ஸ், மாவட்ட நிதி ஆதரவு திட்ட ஒப்புதல் குழு உறுப்பினர் நெல்லைமதி, உதவி செயற்பொறியாளர் (தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மாவட்ட சமூகநல அலுவலர் மதிவதனா, இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் வேல்ராஜன், குழந்தை நலக்குழு தலைவர் விஜயராணி, குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்/பாதுகாவலர்கள், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.