August 30, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

1 min read

Cooperative employees stage protest in Tenkasi

8.10.2025
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்க மாநில செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தென்காசி மண்டல இணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பே.மல்லிகா தலைமை தாங்கினார்.மாநில செயற்குழு உறுப்பினர் மா. கார்த்திஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் இரா.ராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தென்காசி பள்ளி கொண்டான் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தஞ்சாவூர் மண்டலத்தில் ஊழியர் விரோதம் போக்கில் செயல்படும் தஞ்சாவூர் சரக துணை பதிவாளர் வி.நா.சாந்தினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டுறவுத் துறையில் அனைத்து பணி இடங்களுக்கும் பதவி உயர்வு வழங்கிடும்போது கலந்தாய்வு முறையில் மண்டல ஒதுக்கீடு செய்து தர வேண்டும் 6:00 மணிக்கு மேல் காணொளி ஆய்வு கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும் மேலும் 6 மணிக்கு மேல் காணொளி மூலம் கூட்டம் நடத்தும் உயர் அலுவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

20 கோடிக்கு மேல் கடன் நிலுவையில் உள்ள பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களுக்கு மேலாண்மை இயக்குனர் பணியிடம் உருவாக்கட வேண்டும். தனியார் தொழில் முனைவோர் நடத்தும் முதல்வர் மருந்தகங்களுக்கு லாபத்தை அதிகரித்து தரும் நோக்கில் கூட்டுறவு சார் பதிவாளர்களை பயன்படுத்தக் கூடாது.

அடிப்படைக் கட்டமைப்புகளை போதுமான அளவிற்கு ஏற்படுத்தாமல் தாயுமானவர் திட்டத்தை இரண்டு தினங்களில் செயல்படுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
.
இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் சார்பில் சேகர், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் ராஜசேகர், சமூக நலத்துறை பணியாளர் சங்கம் சார்பில் முத்து மாரியப்பன், வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் முருகன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் கோபி,
மாவட்டச் செயலாளர்
ந.வெங்கடேசன், மாநில பொதுச் செயலாளர் க. துரைசிங் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முடிவில் மாவட்ட பொருளாளர் ரா. செல்வகணேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *