June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசிக்கு முதல்-அமைச்சர் 24, 25-ந் தேதி வருகை

1 min read

Chief Minister to visit Tenkasi on 24th and 25th

8.10.2025

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பல்வேறு நலத் திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கி வருகிறார். அதன்படி தென்காசி மாவட்டத்திற்கு இம்மாதம் 24, 25 ம் தேதிகளில் வருகை தர உள்ளார்.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகையை முன்னிட்டு தமிழ்நாடு வருவாய் துறை அமைச் சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
ராமச்சந்திரன், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ ஏ.கே.மல் கிஷோர், மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் செ.அரவிந்த் மற்றும் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக மாவட்ட செயலாளர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை தேர்வு செய்தனர்.

அதன்படி தென்காசி மங்கம்மா சாலையும், இலத்தூர் விலக்கு-ஆய்க்குடி சாலையும் சந்திக்கும் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள மிகப்பெரிய மைதானத்தை தேர்வு செய்துள்ளனர்.

அத்துடன் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், நிகழ்ச்சி நடைபெறும் இடம், முதல்வர் செல்லும் பாதை ஆகியவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் கூறுகையில், தமிழக முதல்வர் இம்மாதம் 24,25 ஆகிய தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். 24ம்தேதி காலை தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தரும் முதலமைச்சர் அங்கிருந்து கோவில்பட்டி சென்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மாலை 4 மணிக்கு புறப்பட்டு சங்கரன்கோவில் வழியாக குற்றாலம் வருகை தருகிறார். இலத்தூர் விலக்கு பகுதியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் முதல்வருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இரவில் குற்றாலம் சுற்றுலா மாளிகையில் தங்குகிறார். மறுநாள் 25ம்தேதி பல்வேறு துறை சார்ந்த புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு கட்டிடங்களை திறந்து வைக்கிறார்.

மேலும் தென்காசி
மாவட்டம் முழுவதிலும் உள்ள பயனாளிகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *