செங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-1 மாணவி பலி; சாலை மறியல்
1 min read
Plus-1 student dies in motorcycle accident near Sengottai; road blocked
8/10/2025
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அகுகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-1 மாணவி பலியானார். அவரை அழைத்து சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். அந்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்யக்கோரி மாணவியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் என்பவரது மகள் பாக்கியலெட்சுமி (வயது 15). இவர் குற்றாலத்தில் உள்ள தனியார் – பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்துள்ளார். இவரை கடந்த 5 ம் தேதி வல்லம் சிலுவைமுக்கு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 24) என்பவர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
வல்லம் குளத்துக்கரை ரோட்டில் சென்றபோது. எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த பாக்கிய
லெட்சு மி தென்காசி அரசு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற மாணவி பாக்கியலட்சுமி
மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் . அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பாக்கியலட்சுமி நேற்றுசிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி . பாக்கியலட்சுமியை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற ரமேஷை கைது செய்தனர்.
இந்நிலையில் பாக்கியலட்சுமியின் உறவினர்கள் ரமேசை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பதை
என்று வலியுறுத்தி, செங்கோட்டை காவல் நிலை யம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் தென்காசி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழனியன், செங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலை கைவிட்டு உறவினர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.