June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆர்.டி.ஓ. செல்லான் ஆப் என்ற பெயரில் பண மோசடி: திருநெல்வேலி போலீஸ் எச்சரிக்கை

1 min read


RTO Chellan App scam: Tirunelveli Police warns

11.10.2025
திருநெல்வேலி மாவட்ட சைபர்கிரைம் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தற்போது ஆர்.டி.ஓ. செல்லான் ஆப் என்ற பெயரில் வாட்ஸ்ஆப் மூலமாக பண மோசடி நடைபெற்று வருகிறது.

வாட்ஸ்ஆப் செயலி வாயிலாக அறிமுகமில்லாத எண்ணிலோ (அ) குழுக்களில் (GROUP) உள்ள நபர்களின் எண்கள் மூலமாகவோ RTO Challan App-ஐ (Apk file) install செய்து உங்கள் வாகனத்திற்கு Fine amount-ஐ (தண்டத்தொகை) உடனே செலுத்த வேண்டும் என மெசேஜ் வரும். அதை update செய்யவில்லை என்றால் உங்களது வாகனத்தின் லைசென்ஸ் முடக்கபட்டுவிடும் என செய்தி இருக்கும்.

அதை உண்மையென நம்பி கிளிக் செய்துவிட்டால் உங்கள் வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்படும்; மற்றும் உங்களது வங்கி கணக்கிலிருந்து பணம் மோசடியாக எடுக்கப்பட்டுவிடும். மேலும் இந்த ஆர்.டி.ஓ. செல்லான் ஆப் மெசேஜ் தானாகவே உங்கள் வாட்ஸ்ஆப் குழுக்களில் உள்ள அனைத்து நபர்களுக்கும் உங்களது மொபைல் எண்ணில் இருந்தே உங்களுக்கு தெரியாமலே பகிரப்படும். இந்த ஆர்.டி.ஓ. செல்லான் ஆப்பை டவுன்லோடு செய்தால் அவர்களுடைய வாட்ஸ்ஆப் நம்பரும் தொடர்ச்சியாக ஹேக் செய்யப்பட்டும் மற்றும் மொபைல் போனில் உள்ள வங்கி கணக்கு தொடர்பான தரவுகளையும் ஹேக் செய்தும் பண மோசடி செய்வார்கள்.

இதே போன்று வாட்ஸ்ஆப் மூலமாக அறிமுகமில்லாத எண்ணிலோ (அ) உங்கள் வாட்ஸ்ஆப் குழுக்களில் உள்ள தெரிந்த நபர்களின் RTO Challan App- fine amount எனவும், sbi bank, axis bank, union bank etc., ஆகிய வங்கிகளின் reward points எனவும் (அ) அரசாங்க நலதிட்ட உதவி, மானியம் என்று வரும் எந்த Apk file-களையும் உங்களது மொபைலில் பதிவிறக்கம் (INSTALL) செய்ய வேண்டாம். இது போன்று போலியான மெசேஜ்கனை உடனே பிளாக் (Block) செய்ய வேண்டும்.

இது போன்ற சைபர் கிரைம் நடைபெற்றால் சைபர் கிரைம் www.cybercrime.gov.in அல்லது 1930 என்ற Toll Free எண்ணிற்கு அழைத்து உடனடியாக உங்களுடைய புகாரினை பதிவு செய்யுமாறு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *