August 30, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி

1 min read

Elderly man attempts to set himself on fire at Tenkasi District Collectorate

14.10.2025
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்த முதியவர் தனது தலையில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பகுதியைச் சேர்ந்த முதியவர் முனியாண்டி (வயது 60) தனக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத்தர வலியுறுத்தி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி அருகே உள்ள ஆய்க்குடியை சேர்ந்த முனியாண்டி நேற்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருகைதந்த போது , ஆய்க்குடி யில் உள்ள தனக்கு சொந்த மான நிலத்தை தனி நபர் ஆக்கிரமித்துள்ள நிலையில் அதை மீட்டுத்தர பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்று கூறி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் இருந்து ரயில் நகர் செல்லும் சாலையோரம் நின்று உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தற் கொலைக்கு முயன்றார்.

அப்போது அந்த பகுதியில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் உடனடியாக தண் ணீரை ஊற்றி அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

ஏற்கனவே கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கள்ளத்திகுளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களில் 10 பேர் தங்கள் தலையில் மண்ணெண் ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வாரம் ஆய்க்குடியை சேர்ந்த ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *