ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி வரதராஜனுக்கு ஜாமீன் மறுப்பு
1 min read
Retired police officer denied bail
18.10.2025
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, தவெக தலைவர் விஜய் குறித்து கண்டனங்களை முன்வைத்தார். அதேவேளை, வழக்கை விசாரித்த நீதிபதி குறித்து சமூகவலைதளங்கள் அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டன. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர்.

அந்த வகையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் நீதிபதி அவதூறு பரப்பியதாக சென்னை கோடம்பாக்கத்தை ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி வரதராஜன் (வயது 64) என்பவரை கடந்த 7ம் தேதி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வரதராஜன் காவல்துறையில் கைரேகை பிரிவில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள வரதராஜன் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்தமனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் வரதராஜனுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.