June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவுக்கு வரிகள் கடுமையாக இருக்கும்- டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

1 min read

Trump warns India that tariffs will be tough

21.10.2025
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் மீதான போரைக் இந்தியா மறைமுகமாக ஆதரித்து வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனால், இந்தியாவுக்கு எதிராக 25 சதவீதம் கூடுதல் வரியையும் அமெரிக்கா விதித்துள்ளது. இதற்கிடையே, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை படிப்படியாக நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

ஆனால் இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்தது.

இந்த நிலையில், வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப், இந்தியாவிற்கு கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது: “இந்திய பிரதமர் மோடியுடன் நான் பேசினேன். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கப் போவது இல்லை என்று அவர் கூறினார்” என்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *