தங்கம் விலை காலையில் சற்று உயர்ந்து மாலையில் அதிரடியாக சரிந்தது
1 min read
Gold prices rose slightly in the morning and fell sharply in the evening
தொடர்ந்து உச்சத்தில் இருந்து அனைத்து தரப்பு மக்களையும் விழிபிதுங்க வைத்த தங்கம் விலை, நேற்று முன்தினம் அதிரடியாக குறைந்து இருந்தது. அன்றைய நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.460-ம், சவரனுக்கு ரூ.3 ஆயிரத்து 680-ம் சரிந்தது. எப்படி விலை ஏற்றம் கண்டதோ, அதே வேகத்தில் சரிந்து விற்பனை ஆனது. இதன் தொடர்ச்சியாக நேற்று மேலும் தங்கம் விலை குறைந்தது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 540-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
அந்த வகையில் இன்று காலை சற்று உயர்ந்தது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,540-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,320-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் காலையில் உயர்ந்த தங்கம் விலை தற்போது குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 140 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,400-க்கும் சவரனுக்கு 1120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.91,200-க்கும் விற்பனையானது.
கடந்த சில நாட்களாக வெள்ளி விலை குறைந்து வருகிறது. அந்த வகையில், இன்றும் கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
23-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000
22-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,320
21-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 96,000
20-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 95,360
19-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 96,000
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
23-10-2025- ஒரு கிராம் ரூ.174
22-10-2025- ஒரு கிராம் ரூ.175
21-10-2025- ஒரு கிராம் ரூ.182
20-10-2025- ஒரு கிராம் ரூ.190
19-10-2025- ஒரு கிராம் ரூ.190