வங்கக்கடலில் 27ம் தேதி உருவாகும் “மோந்தா” புயல்
1 min read
Cyclone “Montha” to form in the Bay of Bengal on the 27th
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று அதிகாலை 5.30 மணி அளவில் உரு இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புகள் அதிகம் என்று எதிர்பார்க்கப்பட்டது அதன்படியே வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்தகட்டமாக புயலாக மாறுகிறது. வரும் 27ம் தேதி உருவாக உள்ளதாக எதிர்பார்க்கப்படும் புயலுக்கு Montha (மோந்தா புயல்) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாளை முதல் எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.
வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிட்ட நிலையில், முதல் சுற்று மழை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.. ஏனெனில் வங்கக் கடலில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மட்டுமே வலுப்பெற்றது. அதேநேரம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ, புயலாகவோ வலுவடையவில்லை. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்த போதிலும் பெரிய அளவில் அழை இல்லை..
இதனிடையே வலு குறைந்து காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியதால் மழை பொழிவு குறைந்துவிட்டது.
இந்த நிலையில் வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகி உள்ளது தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக இந்தியவானிலை ஆய்வு மையம் இன்று காலை கூறியிருந்தது. இந்நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வரும் 27ம் தேதி புயலாக உருவெடுக்க வாய்ப்பு உளள்தாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்த புயலுக்கு montha புயல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இன்று உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி அக்டோபர் 26ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாமாகவும், 27ம் தேதி புயலாகவும் வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.