August 27, 2026

Seithi Saral

Tamil News Channel

அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சி தொடரும் – ஓ.பன்னீர்செல்வம்

1 min read


Efforts to unite AIADMK will continue – O. Panneerselvam

30.10.2025
பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்திற்குச் செல்லும் வழியில் அபிராமம் பகுதியில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் சந்தித்தனர். தொடர்ந்து அவர்கள், தேவர் சிலைக்கு கூட்டாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், மூவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது;

”பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்றிணைக்கவே பசும்பொன்னில் இன்று இணைந்திருக்கின்றோம். அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே குடையில் நின்று, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் தமிழ்நாட்டில் நிறுவ வேண்டும் என சபதம் எடுத்திருக்கிறோம். பிரிந்திருக்கும் அதிமுக சக்திகள் சேரவில்லை என்றால் மட்டுமே தி.மு.க. ஆட்சி மீண்டும் வரும் என்று கூறியதற்கு விளக்கம் அளித்து, “பிரிந்திருக்கும் அதிமுக சக்திகள் சேரவில்லை என்றால்தான் மக்கள் மீண்டும் திமுக ஆட்சியை தேர்தெடுப்பார்கள் என்று சொன்னேன்.. மீண்டும் திமுக ஆட்சி வரும் என்று நான் சொல்லவில்லை.” என்று கூறினார்.

அதன்பின்னர் டிடிவி தினகரன் பேசியதாவது:-

கொங்கு நாட்டு தங்கம் செங்கோட்டையன். எங்கள் ஒருங்கிணைப்பு பணி தொடரும். துரோகத்தை வீழ்த்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை கொண்டுவர அதிமுகவினரை ஒருங்கிணைப்போம். ஒருங்கிணைப்பு பணியில் செங்கோட்டையன் எங்களுடன் கைகோர்த்துள்ளார். தேர்தலில் இணைந்து பணியாற்ற மூவரும் இணைந்துள்ளோம்.

அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே குடையில் நின்று மீண்டும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவியின் ஆட்சியை தமிழ்நாட்டில் நிறுவிட வேண்டுமென சபதம் எடுத்திருக்கிறோம். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிதான் எங்கள் எதிரி; அவரை வீழ்த்தும் வரை ஓயமாட்டோம். வாக்களர் சிறப்பு தீவிர திருத்தத்தால் குழப்பம் ஏற்படும்”

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து 3 பேரும் இணைந்ததால் ‘என்னை கட்சியில் இருந்து நீக்கினால் மகிழ்ச்சி தான்’ என செங்கோட்டையன் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *