August 27, 2026

Seithi Saral

Tamil News Channel

‘கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறையின் நடவடிக்கை செல்லும்’ -கோர்ட்டு உத்தரவு

1 min read

‘The Enforcement Directorate’s action to freeze Karti Chidambaram’s assets will continue’ -Court order 31/10/2025
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான டெல்லியில் உள்ள சொத்துகளையும், அவரது வங்கி கணக்கையும் அமலாக்கத்துறை முடக்கியது. இதனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறையின் முடக்க நடவடிக்கை சுமார் ஓராண்டிற்கு பிறகு மேற்கொள்ளப்பட்டதாகவும், இதனை சட்டப்படி செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் வாதிடப்பட்டது. அதே சமயம் அமலாக்கத்துறை தரப்பில், கொரோனா காலகட்டம் காரணமாக தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, கார்த்தி சிதரம்பரம் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க மறுத்ததோடு, கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறையின் நடவடிக்கை செல்லும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *