தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்-கலெக்டர் பங்கேற்பு
1 min read
Tenkasi District People’s Grievance Redressal Day Meeting-Collector Participation
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர்.தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் பொதுமக்களிட. மிருந்து 375 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார்.
அதனைத்தொடர்ந்து தாட்கோ மூலம் 01 பயனாளிக்கு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.9.60 இலட்சம் மதிப்பிலான சுமை வாகனத்தின் சாவியினையும், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுவிற்கு தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியம் மூலம் பதிவு செய்யப்பட்ட 15 பயனாளிகளுக்கு நலவாரிய அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
மேலும் இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 375 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயசந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி மாவட்ட மேலாளர் (தாட்கோ) க.ராஜ்குமார், உதவி மேலாளர் ரா.அருணாசலம் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.