June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்

1 min read

Flag hoisting ceremony of Aippasi Thirukalyana festival at Tenkasi temple

6.11.2025
தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 13 ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவி லில் ஜப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியை சிதம்பர கிருஷ்ணன் பட்டர் தலைமையிலான சிவாச்சா ரியார்கள் ஏற்றி வைத்தனர். அதைதொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகன அலங்கார தீபாரத

இந்து சமய அறநிலை யத்துறை செயல் அலுவவர் பொன்னி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஷீலாகுமார், மூக்கன், மணியம் செந்தில்குமார், திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவர் இலஞ்சி அன்னையா பாண்டியன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கேற்றனர்.

விழாவில் தினமும் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படி தீபாரதனை, சுவாமி அம்பாள் பல்வேறு வாக னங்களில் வீதி உலா நடைபெறுகிறது. விழாவில் 13 ம் தேதி காலை 9.20 மணிக்கு மேல் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. 14ம் தேதி காலை 9.10 மணிக்கு மேல் யானை பாலம் தீர்த்தவாரி மண்டபத்திற்கு அம்பாள் தபசுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாலை 06.05 மணி மேல் தெற்கு மாசி வீதியில் வைத்து காசி விசுவநாதர் சுவாமி உலகம்மன் தவசு காட்சி கொடுத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து இரவு 9 10 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர் குழு தலைவர் ஒய். பாலகிருஷ்ணன், செயல் அலுவலர் பொன்னி, ஆய்வர் சரவணக்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முருகேசன், புவிதா, ஷீலா குமார், மூக்கன், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *