ராமநதி அணையில் இருந்து வினாடிக்கு 60 க.அடி தண்ணீர் திறப்பு
1 min read
60 cubic feet of water released from Ramanathi Dam
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். நேற்று தண்ணீர் திறந்து வைத்தார்.
அதன்பின்னர் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தெரிவித்ததாவது:-
தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம் அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம், கருப்பாநதி நீர்த்தேக்கம் மற்றும் இராமநதி நீர்த்தேக்கங்களிலிருந்து நடப்பாண்டு (2025-2026) 1435-ம் பசலி பிசான பருவ சாகுபடிக்கு 07:112025 முதல் 3103.2026 வரையிலான 145 நாட்களுக்கு பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறப்பதற்கு தமிழ்நாடு அரசின் மூலம் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்றைய தினம் தென்காசி மாவட்டம். செங்கோட்டை வட்டம், அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் இருப்பை பொறுத்து வினாடிக்கு 100 க.அடி வீதம் 95539 மி.க அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடப்படும். இதன் மூலம் தென்காசி மாவட்டம், செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் வட்டங்களில் உள்ள வடகரை கீழ்பிடாகை, வடகரை மேல்பிடாகை, பண்பொழி இலத்தூர் குத்துக்கல் வலசை, கொடிக்குறிச்சி, அச்சன்புதூர், நெடுவயல் நயினாகரம். கிளாங்காடு, ஆயிக்குடி. சாம்பவர்வடகரை, சுரண்டை ஆகிய பாசன பரப்புகளில் 2147.47 ஏக்கர் நேரடி பாசனமும், 5495.68 ஏக்கர் மறைமுக பாசனம் என மொத்தம் 7643.15 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.
கடையநல்லூர் வட்டம், கருப்பாநதி நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 25 கன அடி வீதம் 118934 மி.கன அடி தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் தென்காசி வட்டம், கடையநல்லூர் வட்டத்தில் உள்ள வைரவன் குளம், கிருஷ்ணாபுரம், சொக்கம்பட்டி, குமந்தாபுரம், போகநல்லூர், கடையநல்லூர், இடைகால், கிளாங்காடு ஆகிய பாசன பரப்புகளில் 155171 நேரடி பாசனமும், 796299 மறைமுக பாசனம் என மொத்தம் 9514.70 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.
தென்காசி வட்டம். இராமநதி நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 60 க.அடி வீதம் 823.91 மிக.அடி தண்ணீர் திறந்து விடப்படும். இதனால் தென்காசி மாவட்டத்தில், தென்காசி வட்டம், கடையம், மேலக்கடையம். கோவிந்தப்பேரி ஆழ்வார்குறிச்சி, வாகைக்குளம் பொட்டல்புதூர், அயன்பொட்டல்புதூர், ரவணசமுத்திரம், பாப்பன்குளம் கிராமங்களில் 1527.19 ஏக்கர் நேரடி பாசனமும், 3416.32 ஏக்கர் மறைமுக பாசனம் என மொத்தம் 4,94351 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும். இதன் மூலம் தென்காசி மாவட்டத்தில் 522637 ஏக்கர் நேரடி பாசனமும், 1687499 ஏக்கர் மறைமுக பாசனம் என மொத்தம் 2210136 எக்கர் பாசன நிலங்கள் 145 குளங்கள் பயன்பெறும்.
எதிர் வரும் நாட்களில் வடகிழக்குப்பருவமழையினால் மேலும் அணையில் நீர் வரத்து அதிகரிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நீர்த்தேக்கத்தில் எதிர்வரும் நாட்களில் பருவ மழை பொய்த்து எதிர்பார்க்கின்ற நீர் வரத்து கிடைப்பப் பெறவில்லையென்றால் இருக்கும் நீரை அனுமதிக்கப்பட்ட பாசன நிலங்கள் முழுமைக்கும் பயன்பெறும் வகையில் சுழற்சி முறையில் வழங்கப்படும், நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர்விநியோகப் பணியில் நீர்வளத்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், செயற்பொறியாளர் (நீர் வளம் ஆதாரத்துறை) மணிகண்டராஜன், வடகரை பேரூராட்சிமன்ற தலைவர் ஷேக் தாவூது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.எடிசன் மற்றும் அடவி நயினார் நீர்பாசனத்தை சார்ந்த விவசாயிகள், அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.