அஞ்சலக ஏ.டி.எம். மூலம் வங்கி ஏ.டி.எம்.களிலும் பணப் பரிவர்த்தனை செய்யலாம்
1 min read
You can also make money transactions at bank ATMs through post office ATMs.
அஞ்சலக சேமிப்பு கணக்குகளுக்கு ஏடிஎம் கார்டு மூலம் பின்வாங்கி பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி உள்ளது .இந்த அஞ்சலக சேமிப்பு கணக்குளுக்கு தாரர்களுக்கு வழங்கப்படும் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி அஞ்சலக ஏடிஎம் மையங்களிலும் பிற வங்கி ஏடிஎம் மையங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்.
என்று கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.சுரேஷ் குமார் கூறியிருப்பதாவது:-
சில தொழில்நுட்ப தர மேம்பாடு காரணமாக அஞ்சலத்துடன் இணைந்த ஏடிஎம் மைய செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது அந்த பணி முடிவுற்று கோவில்பட்டி தலைமை அஞ்சலங்களில் ஏடிஎம் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சேவை வாயிலாக பொதுமக்கள் தங்கள் அஞ்சல சேமிப்புக் கணக்கிலிருந்து பண பரிவர்த்தனை செய்யலாம் மற்றும் தங்கள் சேமிப்பு கணக்கு தொகை இருப்பை அறிந்து கொள்ளலாம் பிற வங்கிகளின் ஏடிஎம் அட்டைகளை அஞ்சல் துறை ஏடிஎம் மையங்களில் பயன்படுத்தலாம் அஞ்சலகத்திற்கு வழக்கமான அலுவலக நேரங்களில் வர வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பொதுமக்கள் இச்சேவையை பயன்படுத்தி பயன்பெறலாம்.
இவ்வாறு கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.சுரேஷ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.