தென்காசியில் 7 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு
1 min read
7 people jailed under the Prevention of Gangsters Act in Tenkasi
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.அரவிந்த் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவின் பேரில் 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்..
தென்காசி மாவட்டம், அச்சன்புதூர் காவல் நிலைய கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியான வடகரை ஹுசைன்கான் என்பவரின் மகன் இஸ்மாயில் (வயது 55), குற்றாலம் காவல் நிலைய ஆயுத தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான காசிமேஜபுரம் இசக்கிமுத்து என்பவரின் மகன் அருண்குமார்(வயது 22), ஆலங்குளம் காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியான அய்யனார்குளம் சண்முகையா என்பவரின் மகன் உக்கிரமசிங்கம் (வயது 59), தென்காசி காவல் நிலைய கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான குத்துக்கல்வலசை பெருமாள் சாமி என்பவர் மகன் ராமகிருஷ்ணன் (வயது 31), வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான குத்துக்கல்வலசை அருணாச்சலம் என்பவரின் மகன் சுரேஷ் (வயது 26), செங்கோட்டை காவல் நிலைய ஆயுத தடைச் சட்டம் வழக்கில் கைது செய்யப்பட்ட மேலப்பாவூர் கருப்பசாமி என்பவரின் மகன் வசந்தகுமார் @ மயிலம்பாடி (வயது 25) மற்றும் செங்கோட்டை காவல் நிலைய மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான புளியரை பகவதிபுரம் சுப்பிரமணியன் என்பவரின் மகனான சரவண மகேஷ் (வயது 40) ஆகியோர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.அரவிந்த் பரிந்துரையின் பேரில், தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவின் பேரில் மேற்படி 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பையும், தொடர் குற்றவாளிகள் மற்றும் சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.