அம்பை: கால்வாயை தூர்வாரக்கோரி விவசாயிகள் தர்ணா
1 min read
Farmers’ protest at Amba Public Works Department office
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் கால்வாய்களை தூர்வாராமல் அணையில் தண்ணீர் திறந்து விடுவதால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணி வந்து சேரவில்லை என கூறி விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்
நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசம் கரையார், மணிமுத்தாறு ஆகிய அணைகளை நம்பி கார் மற்றும் பிசான சாகுபடியின் கீழ் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு கார் சாகுபடி முடிவவுற்ற அரசு கால்வாய்களை தூர்வராமல் அணையில் தண்ணீர் திறந்து விட்டதால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேராமல் பயிர்கள் சேதமாகி கடும் நஷ்டத்தை சந்தித்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர் குறிப்பாக நதியுன்னி கால்வாய் மற்றும் கோடை மேலழகியான் கால்வாய் தூர்வாரப்படாமல் தண்ணீர் திறப்பதால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் தற்போது மீண்டும் கால்வாய் தூர்வாரப்படாமல் பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடைமடை பகுதியான மன்னார்கோயில் வாகைகுளம் பிரம்மதேசம் கெளதம்புரி கோயில் குளம் ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என கூறப்படுகிறது இதையடுத்து இன்று கால்வாயை தூர்வார கோரி நதியுன்னி கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் தலைவர் மாரிமுத்து தலைமையில் விவசாயிகள் அம்பாசமுத்திரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். ஆனால் அதிகாரிகள் அங்கு இல்லாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அங்கேயே தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இது குறித்து தலைவர் மாரிமுத்து கூறும்போது, ஏற்கனவே விவசாயிகள் நகைகளை அடமானம் வைத்து கடும் கஷ்டத்தோடு விவசாயம் செய்து வருகிறோம். கால்வாய் தூர்வாராமல் தண்ணீர் திறப்பதால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேர்வதில்லை இதனால் பயிர்கள் கருகி நஷ்டத்தை சந்திக்கிறோம் எனவே அரசு உடனடியாக கால்வாயை தூர்வார வேண்டும் என்று கூறினார்.