தூத்துக்குடியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
1 min read
ATM machine broken and attempted robbery in Thoothukudi
14.11.2025
தூத்துக்குடி புதிய துறைமுகம் அருகே வணிக வளாகத்தில் இந்தியா 1 ஏ.டி.எம். உள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் உள்ளே நுழைந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளார். ஆனால் உடைக்க முடியாததால் ஆத்திரத்தில மானிட்டரை உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து ஏ.டி.எம். மையத்தின் சர்வீஸ் பார்ட்னரான தூத்துக்குடி கங்கா பரமேஸ்வரி காலனியை சேர்ந்த நடராஜன் மகன் சுரேஷ்குமார் (வயது 40) என்பவர் தெர்மல்நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஷோபாஜென்சி, சப்-இன்ஸ்பெக்டர் அய்யம்பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான வாலிபர் குறித்து விசாரணை நடத்தியதில் அவர் காதர்மீரான் நகரை சேர்ந்த செல்வம் மகன் வேல்முருகன் என்பது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.