June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

கீழப்பாவூர் பேரூராட்சியில் தார்சாலை அமைக்கும் பணி

1 min read

Construction of tarmac road in Keelappavur Panchayat

15.11.2025
தென்காசி மாவட்டம்,
கீழப்பாவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கருமடையூரில் ரூ.20 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணியினை பேரூராட்சி தலைவர் பிஎம்எஸ். ராஜன் துவக்கி வைத்தார்.

கீழப்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட கருமடையூர் வடக்கு தெருவில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் தலைமை வகித்து, அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். பேரூராட்சி துணைத்தலைவர் ராஜசேகர், கீழப்பாவூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜா.மாணிக்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 3வது வார்டு உறுப்பினர் மாலதி முருகேசன் அனைவரையும் வரவேற்று பேசினார.
.
இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூர் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் சீ.பொன்செல்வன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்
விஜிராஜன், இசக்கிமுத்து, முத்துசெல்விஜெகதீசன்,; மற்றும் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் சுதாகர், அலுவலக பணியாளர்கள் தர்மராஜ், தனுஸ்கோடி, குமார் உள்ளிட்ட அனைத்து நிலை பணியாளர் கள், ஊர் முக்கிய பிரமுககர் கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *