June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலத்தில் பலத்த மழை; அருவிகளில் குளிக்க தடை

1 min read

Heavy rain in Courtallam; bathing prohibited in waterfalls

19.11.2025
தென்காசி மாவட்டம், குற்றாலம் தென்காசி செங்கோட்டை பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது. இதனால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தடாகத்தின் மீது தண்ணீர் விழுகிறது. ஐந்த ருவியிலும் சில பிரிவுகள் ஒன்றாக இணைந்து இணைந்து விழு கிறது. பழைய குற்றால ருவி, புலி அருவி, சிற்ற ருவி ஆகியவற்றிலும் தண்ணீர் அதிகமாக வருகிறது. பழைய குற்றால அருவி கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் சாலை, பார்க்கிங் பகுதி, கழிப்பறை உள்ளிட்டவை பழுதடைந்த நிலையில் சீர மைக்கும் பணிகள் நடைபெற உள்ளதாக கூறி ஒரு மாத காலமாக மூடப்பட்டுள்ளது. எனவே பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. மெயின் அருவியில் நேற்று மதியமே வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக மதியம் முதலே சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தடை விதிக்கப்பட்ட போதும் தண்ணீர் அதிகரிக்கவில்லை. ஆனால் தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் பெய்த பலத்த மழை யின் காரணமாக மாலை யில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போதைய நிலையில் பிரதான அருவிகளான குற்றாலம் மெயின் அருவி. ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *