தென்காசி மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் மாற்றுத் திறனாளி நியமன உறுப்பினர் பதவியேற்பு
1 min read
Disabled member takes oath at Tenkasi District Panchayat meeting
தென்காசி மாவட்ட ஊராட்சியின் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஊராட்சியின் சாதாரண கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சியின் துணைத்
தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி செயலாளர் விஷாலினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சந்திரலீலா, மதிமாரிமுத்து, தேவி, சுதா, கனிமொழி, பூங்கொடி, சாக்கரடீஸ், முத்துலட்சுமி, மைமூன் பிவி, சுதா, சுப்பிரம ணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் தங்களது வார்டு வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்துப் பேசினர்.
மேலும் இந்த கூட்டத்தில் தென்காசி மாவட்ட ஊராட்சியில் 2025 அக்டோபர் மாதம் மாநில நிதிக் குழு நிதியில் இருந்து மேற்கொண்ட நிர்வாக செலவினங்களை மன்றம் அனுமதித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
அதனைத் தொடர்ந்து 1994ம்ஆண்டு தமிழ் நாடு ஊராட்சிகள் சட்டம் விதி எண் 32ஏ (1) இன் கீழ் தென்காசி மாவட்ட ஊராட்சிக்கு மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினராக குத்துக்கல் வலசை ஊராட்சி அழகப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த மு.பாலசுப்பிரமணியன் என்பவர் நியமனம் செய்யப்பட்ட நிலையில் அவர் உறுதிமொழி யேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.
தென்காசி மாவட்ட ஊராட்சியின் நியமன உறுப்பினராக பதவி ஏற்று கொண்ட பாலசுப்பிரமணிய னுக்கு தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட ஊராட்சியின் துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி. உதய கிருஷ்ணன் மாவட்ட ஊராட்சி செயலாளர். விஷாலினி மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.