சிவகங்கை அருகே பஸ்கள் மோதிய விபத்தில் 11 பேர் பலி
1 min read
11 people killed in bus collision near Sivaganga
30.11.2025
திருப்பூரில் இருந்து காரைக்குடிக்கு இன்று மாலை அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அதேபோல், காரைக்குடியில் இருந்து மதுரை நோக்கி மற்றொரு அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது.
சிவகங்கை மாவட்டம் கும்பங்குடி பாலம் அருகே சென்றபோது இந்த 2 அரசு பஸ்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 9 பெண்கள், ஒரு டிரைவர் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 40 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இந்நிலையில், சிவகங்கை பஸ் விபத்து தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அவசர உதவி எண் அறிவித்துள்ளது. பஸ் விபத்து குறித்த தகவல்கள், மற்றும் பிற அவசர சேவைகள் குறித்து தொடர்புகொள்ள கீழ்க்காணும் உதவி எண் செயல்படுத்தப்பட்டுள்ளது:
*அவசர உதவி எண்: 04575 – 246233
விபத்தில் சிக்கியவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்கண்ட எண்ணை தொடர்புகொண்டு தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.