ஆஸ்திரேலியா பிரதமர் 62வது வயதில் காதலியை திருமணம் செய்தார்
1 min read
Australian Prime Minister marries girlfriend at age 62
30.11.2025
ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் அந்தோணி அல்பனிஸ் (வயது 62). இவர் 2000ம் ஆண்டு கார்மல் மெரி டெம்பட் என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இதனிடையே, கடந்த 2019ம் ஆண்டு அந்தோணி அல்பனிஸ் – கார்மல் தம்பதி விவாகரத்து பெற்றனர்.

அதேவேளை, 2020ம் ஆண்டு பிரதமர் அந்தோணி அல்பனிஸ் ஜோடி ஹைய்டன் (வயது 47) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது
இந்நிலையில், காதலி ஜோடி ஹைய்டனை பிரதமர் அந்தோணி அல்பனிஸ் இன்று திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்துகொண்ட தம்பதிக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தோணி அல்பனிஸ் – ஜோடி ஹைய்டன் திருமண புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.