June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

மத்திய அரசு இணையதளத்தில் 5.17 லட்சம் வக்பு சொத்துகள் பதிவேற்றம்

1 min read

5.17 lakh Waqf properties uploaded on central government website

9.12.2025
வக்பு திருத்த சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசு, அனைத்து பதிவு செய்யப்பட்ட வக்பு சொத்துகளும் ‘ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாடு’ (உமீது) போர்ட்டலில் 6 மாதங்களுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவித்து இருந்தது.

இந்த போர்ட்டல் கடந்த ஜூன் 6-ந்தேதி தொடங்கப்பட்ட நிலையில் டிசம்பர் 6-ந்தேதி வரை சொத்து பதிவேற்றத்துக்கு காலக்கெடு அளிக்கப்பட்டது. இந்த காலக்கெடுவை மேலும் நீட்டிக்க முடியாது என அரசும், சுப்ரீம் கோர்ட்டும் திட்டவட்டமாக தெரிவித்தன.

தற்போது இந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், அது தொடர்பாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உமீது போர்ட்டலில் 5,17,040 வக்பு சொத்துகள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்னள. அவற்றில் 2,16,905 சொத்துகள் நியமிக்கப்பட்ட ஒப்புதல் அளிப்பவர்களால் அங்கீகரிக்கப்பட்டன. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 92,830 ெசாத்துகள் பதிவேற்றப்பட்டு உள்ளன. அடுத்ததாக மராட்டியத்தில் 62,939 சொத்துகளும், கர்நாடகாவில் 58,328 சொத்துகளும் பதிவேற்றப்பட்டு உள்ளன.

மேற்கு வங்காளத்தில் 23,086 சொத்துகள் பதிவேற்றப்பட்டன. மொத்தம் 2,13,941 சொத்துகள் தயாரிப்பாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் காலக்கெடுவின்படி அவை பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. சரிபார்ப்பின் போது 10,869 சொத்துகள் நிராகரிக்கப்பட்டன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *