தென்காசி அருகே மகனுக்கு விஷம் கொடுத்து, தாய் தற்கொலை
1 min read
Mother commits suicide after poisoning son near Tenkasi
11.12.2025
தென்காசி மாவட்டம்,
சாம்பவர் வடகரையில் கடன் பிரச்னையால் பெண் விஷம் குடித்து பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி அருகே உள்ள சாம்பவர் வடகரை மாதாங்கோவில்தெருவை சேர்ந்தவர் ராமலெட்சுமி மகள் உமா (வயது 31). இவருக்கும் சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜிற்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு தர்சிக் முகுந்த் (வயது 9) என்ற மகன் உள்ளார்.அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார்.
கோவிந்தராஜ் தனது மனைவியை விட்டு சென்று விட்டார். இதனால் உமா சாம்பவர்வடகரையில் தனது தாயுடன் வசித்து வருகிறார். பேன்சி ஸ்டோர் கடையில் வேலை செய்து தனது மகனை
படிக்க வைத்து வந்தார்.
இந்நிலையில் உமாவின் கணவர் கோவிந்தராஜ் பாட்டாகுறிச்சியை சேர்ந்தவரிடம் ரூ.5 லட் சத்திற்கு தனது மனைவி உமாவின் தாய் பெயரில் உள்ள வீட்டை கடந்த 2020ல் கிரய அடமானம் கொடுத்ததாக கூறப்படுகிறது இந்த விவகாரம் உமாவுக்கு தெரிய வந்தவுடன் அந்த வீட்டை மீட்பது குறித்து பல முறை
பேச்சுவார்த்தையில்
ஈடுபட்டார்.
ஆனால் வீட்டை திருப்ப முடியவில்லை. இருதரப்பினரும் ஊர் பெரியவர்கள் முன்னிலை யிலும் காவல்துறையிலும் பேசியுள்ளனர். ஆனால்
பேச்சுவார்த்தைக்கு முடிவு எட்டப்படாததால் காவல் துறையினர் கோர்ட் மூலம் தீர்வு பெற்றுக் கொள்ளும் படி அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் கடன்
கொடுத்தவர் தனது கூட் டாளிகளுடன் சென்று வீட்டை காலி செய்யும் படி மிரட்டியதாக தனது தாயிடம் உமா கூறியுள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலுடன் இருந்த உமா நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு மகன் தர்சிக் முகுந்திற்க்கு விஷத்தை கொடுத்து, தானும் குடித் துள்ளார். அருகில் இருந்த வர்கள் இருவரையும் மீட்டு தென்காசி அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உமா பரிதாபமாக உயிரிழந்தார் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவன் தர்சிக் முகுந்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சாம்பவர் வடகரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.